30, 90 நாட்கள் தடுப்புக்காவல்..! நீதிமன்றங்கள் மீண்டும் உத்தரவு பிறப்பிப்பு.

ஆசிரியர் - Editor I
30, 90 நாட்கள் தடுப்புக்காவல்..! நீதிமன்றங்கள் மீண்டும் உத்தரவு பிறப்பிப்பு.

குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கம் நிலையில் சந்தேக நபர்களை 30 தொடக்கம் 90 நாட்கள் கால அவகாசத்தில் பொலிஸாரின் காவலின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்படைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துறைமுக அதிகார சபையின் பணியாளர் ஒருவருக்கு 30 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்ட தேசிய தெளவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஆர்வலர்களுக்கு 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் இஸ்மாயிஸ் மற்றும் மொஹமட் அலியார் ஆகிய இருவரும் கொட்டாஞ்சேனையில் உள்ள மாடி குடியிருப்பு தொகுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் தங்கியிருந்த இடத்தில் தீவிரவாத சிந்தனை கொள்கையை கொண்ட ஹாட்டிஸ்கள், 

இறுவட்டுகள், கணினிகள் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் நீதிமன்றில் எழுத்து மூலம் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்து அவர்களை விசாரணை செய்ய 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு 

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு