முதல்முறையாக இணையும் கார்த்தி-ஜோதிகா!

ஆசிரியர் - Admin
முதல்முறையாக இணையும் கார்த்தி-ஜோதிகா!

ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காற்றின் மொழி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். 

அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடிக்கிறார். அத்துடன் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றில் ஜோதிகா இணைந்துள்ளார்.

கார்த்தி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இருவருக்கும் என்ன கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது சகோதரன், சகோதரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Radio
×