மேஷம் - விகாரி வருட பலன்கள் 2019-2020
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட
மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத் தொடக்கத்தில் ஆண்டு கோளான குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றமிகுந்தப் பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.
திருக்கணிதப்படி வரும் ஜப்பசி 19-ஆம் தேதி முதல் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெற முடியும். தடைபட்டு கொண்டிருந்த திருமண சுப முயற்சிகளில் தடைவிலகி நல்லது நடக்கும். சிறப்பான வரன்கள் தேடி வருவதால் நல்ல வாழ்க்கை அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன் பிரச்சினைகளால் அவதிபடுபவர்களுக்கு கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபம் பெருகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நற்பலன்களை தரும் என்றாலும் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் உயர்பதவிகளும் கிட்டும். உடன் பணிபுரிவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். ஏதாவது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களால் சற்றே மருத்துவ செலவுகள் உண்டாகலாம். நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியாக மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருந்தால் வீண் மனக்குழப்பங்களை குறைத்து கொள்ள முடியும்.
குடும்பம் பொருளாதார நிலை
இந்த ஆண்டு எல்லா வகையிலும் ஓரளவுக்கு ஏற்றத்தைத் தருவதாக அமையும். ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலை மேன்மையடையும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்கு பின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். அசையும், அசையா சொத்துக்கள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் நற்பலன்களைப் பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த ஆதாயங்களைப் பெறுவீர்கள். முடிந்த வரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நற்பலனை தரும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.
உத்தியோகம்
ஆண்டின் தொடக்கத்தில் சில சமயங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குருபெயர்ச்சிக்குப் பின் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சாதிக்க முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சற்று மந்தநிலை நிலவும் என்பதால் புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குருபெயர்ச்சிக்குப் பின் நல்ல லாபத்தினை பெற முடியும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் நற்பலனைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளாலும், தொழிலாளர்களாலும் சிறுசிறு வீண் பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். ஐப்பசியில் ஏற்படவுள்ள குருமாற்றத்திற்குப் பின் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
அரசியல்
உடன் பழகுபவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது உத்தமம். ஆண்டின் பிற்பாதியில் பெயர், புகழ் உயர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். கட்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். அதிகப்படியாக உழைக்க வேண்டிய நிலைகள் ஏற்பட்டாலும் பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்க கூடிய யோகம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சற்று சிறப்பாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். குருபெயர்ச்சிக்குப் பின் பணவரவில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
மாணவ- மாணவிகள்
கல்வியில் சற்று மந்தநிலை நிலவினாலும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகளையும், பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதரவு கிட்டும்.
மாதப்பலன்
சித்திரை
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நிதானமாக செயல்படுவது, முன்கோபத்தை குறைப்பது நல்லது. சனி 9-ல் இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களின் பலமும், வலிமையும் கூடும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படுவர்கள். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சினைகள் விலகி வர வேண்டிய லாபங்கள் வந்து சேரும். முருக வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி
உங்கள் ராசியதிபதி செவ்வாய்- ராகு சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் லாபங்களைப் பெற முடியும். சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குரு 8-ல் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவ வழிபாடு நல்லது.
ஆனி
மாத கோளான சூரியன்- ராகு, செவ்வாய் சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு 8-ல் இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக அனுகூலமானப் பயணங்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
ஆடி
உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கை பெற்று 4-ல் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். 3-ல் ராகு இருப்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் முருக கடவுளை வழிபடுவதும் மிகவும் நல்லது.
ஆவணி
சூரியன், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் உறவினர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது போன்றவற்றின் மூலம் அனுகூலப்பலனை பெற முடியும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் குறையும். முருகப் பெருமனை வழிபடுவதும், சிவனை தரிசிப்பதும் நல்லது.
புரட்டாசி
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வலமான பலன்களை இம்மாதம் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் அனுகூலமும் உண்டாகும். வரும் 8-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகும். கூட்டாளிகளின் ஆதரவால் லாபம் பெருகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
ஐப்பசி
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சூரியன் 7-ல் இருப்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இம்மாதம் திருக்கணிதப்படி 19-ஆம் தேதி ஏற்படும் குருபெயர்ச்சியால் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதாலாவதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் விலகி லாபம் அதிகரிக்கும். சிவ வழிபாடு நல்லது.
கார்த்திகை
குருவும், கேதுவும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளை சமாளிக்கும் அளவிற்கு ஆற்றல் உண்டாகும். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது வளமான பலனை தரும்.
மார்கழி
உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், குரு, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். கூட்டு தொழில் வியாபாரம் செய்பவர்கள் நற்பலனை அடைவார்கள். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து மனநிம்மதி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களைப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். முருக வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தை
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-ல் -சூரியன் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் நல்ல அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்றே கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருகனை வழிபடுவதன் மூலம் நற்பலன் உண்டாகும்.
மாசி
சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் 9-ல் குரு சஞ்சாரம் செய்வதாலும் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கூட்டுதொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
பங்குனி
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் புதன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சூரியன் 12-ல் இருப்பதால் தேவையற்ற வீண் செலவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 1,2,3,9
நிறம் - ஆழ்சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல் - பவளம்
திசை - தெற்கு
தெய்வம் - முருகன்