இலங்கையிலிருந்து இந்தியா செல்ல முற்பட்ட நைஜீரிய பிரஜைகள் கைது!
சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து இந்தியா செல்ல முற்பட்ட நைஜீரிய பிரஜைகள் நால்வரும், அவர்களை அழைத்துச் சென்ற இலங்கையர்கள் இருவரும் தலைமன்னார் கடற் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் நேற்று சந்தேகத்ததுக்கிடமான படகொன்று செல்வதை கடற்படையினர் அவதானித்தனர். விரைந்து செயற்பட்ட கடற்படையினர் படகை சுற்றிவளைத்து சோதனைக்குட்படுத்திய போது நைஜீரியா பிரஜைகள் நால்வரும் , இலங்கையவர்கள் இருவரும் அதில் இருந்தனர்.
இதன்போது 26 , 27 , 32 , 42 ஆகிய வயதுகளையுடைய நைஜீரிய பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களை அழைத்துச் சென்ற மன்னார் மற்றும் பேசாலை பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 23 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.