ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கைத் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை

ஆசிரியர் - Admin
ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கைத் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை

போட்டி ஒன்றின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தம்மீது சுமத்தப்பட்ட

குற்றச்சாட்டை ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கை தமிழன் லூசியன் புஸ்பராஜ் மறுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஆணழகன் போட்டி ஒன்றின் போதே இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இது தமது கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக அமைந்துள்ளதாக புஸ்பராஜ் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் தாம் பங்கேற்பதை தடுக்கும் நோக்கமே இந்த விடயத்தின்

பின்னால் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எனினும் தாம் அமரிக்காவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் நோக்கை கைவிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற நடைபெற்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் என்ற இளைஞன் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை வென்றிருந்தார்.

இதிலிருந்து, ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு