2018ம் ஆண்டில் 2100 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ளோம், இந்திய இலங்கை கடற்படையினருக்கிடையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு..

ஆசிரியர் - Editor I
2018ம் ஆண்டில் 2100 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ளோம், இந்திய இலங்கை கடற்படையினருக்கிடையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு..

போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த இந்திய கடற்படையினா் இலங்கை கடற் படையினருக்கு தொடா்ச்சியாக ஆதரவினை வழங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளை தளபதி பியஸ் டி சில்வா கூறியுள்ளாா். 

கச்சதீவு அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாவில் இந்திய இலங் கை ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு பதில் வழங்கியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,  

இலங்கை கடற்படை சார்பில் கடத்தலை தடுக்க பல  கட்ட பணிகள் நடை பெற்று வரு கிறது,கடந்தாண்டு சுமார் 2,100 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுள்ளது, மேலும் கடந்த 9 வாரத்தில் 700 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே இலங்கை கடற்படை தொடர்ச்சியாக போதைபொருள் கடத்தலை தடுக்கவும் கடத்தல்காரர்களை பிடிக்கவும் ரோந்து கப்பல்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிற து. நடுக்கடலில் கடத்தல் சம்பவத்தை தடுக்க 

இலங்கை இந்திய கடற்படையினர் கூட்டு ரோந்து நடத்த வாய்ப்புள்ளதா என கேட்ட தற்க்கு கடத்தலை தடுக்க இந்திய கடற்படயையும், கடலோர காவல்படையும் கடத்தல் காரர்களை பிடிக்க எங்களுடன் உறுதுனையாக இருகின்றனா்.

இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய கடல் எல்லைக்குள் கடத்தல்காரர்கள் நுழை ந்தால் உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் அளித்து அவர்களை பிடிக்க நடவடி க்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படை ஒரு போதும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைவது கிடையாது, அப்படி எல்லை தாண்டி வேண்டிய அவசியம் இருந்தால் இந்திய உயர் அதிகாரிகளிட ம் அனுமதி பெற்று இந்திய எல்லைக்குள் சென்று படகுகளை 

கைது செய்வோம்,இதனை தவிர ஒருபோதும் இந்திய எல்லைக்குள் எங்கள் படகு நுழைவது கிடையாது,ஆனால் கடந்த காலங்களில் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்த மீனவர்களை மட்டும்மே கைது செய்துள்ளோம்.

மேலும் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க இந்திய இலங்கை கூட்டு ரோந்து நடத்துவது குறித்த திட்டம் இருந்தது ஆனால் தற்போது இந்திய கடற்படையினர் இந்திய கடல் எல்லையிலும், 

அதே சமயத்தில் இலங்கை கடற்படை இலங்கை எல்லையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் எல்லை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு