SuperTopAds

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான ஒரே வழி! - கஜேந்திரகுமார்

ஆசிரியர் - Admin
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான ஒரே வழி! - கஜேந்திரகுமார்

இலங்­கை­யை சர்வதேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்­குப் பரிந்­து­ரைத்­தல் அல்­லது சர்வதேச சிறப்­புக் குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்தை நிறு­வு­தலே போரால் பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளான தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைப்­ப­தற்­கான ஒரே­ வழி­மு­றை­ என்று தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலைவர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற பொது­வி­வா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

30/1 தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து, அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய இலங்கை அர­சின் உயர்­மட்­டத் தலை­வர்­க­ளான ஜனாதிபதியும் பிரதமரும் குற்­ற­வி­யல் நீதி­யை­யும் பொறுப்­புக்­கூ­ற­லை­யும் நிரா­க­ரித்து வரு­கி­றார்­கள். 

இன அழிப்­பால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களோ குற்­ற­வி­யல் நீதி­யை­யும் பொறுப்­புக்­கூ­ற­லை­யும் கோரி­நிற்க, இந்­தக் கூட்­டத் தொடர் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் வேளை­யில், இன அழிப்­பால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு மத்­தி­யில் வடக்­கில் உரை­யாற்­றிய பிரதமரோ மன்­னிப்­போம் மறப்­போம் என்று வெளிப்­ப­டை­யா­கக் கூறி­யுள்­ளார்.

குற்­ற­வி­யல் நீதி­யை­யும் பொறுப்­புக்­கூ­ற­லை­யும் தொடர்ச்­சி­யாக இலங்கை அரசு அர­சு­ நி­ரா­க­ரித்து வரு­கின்ற நிலை­யில், இது பாதிப்­ப­டைந்த மிகப்­பெ­ரும்­பான்­மை­யான தமிழ் மக்­க­ளுக்கு, குற்­ற­வி­யல் நீதியை வழங்க முடி­யாது என்­பதை தெளி­வாக எடுத்­துக்­காட்­டு­கி­றது.

தீர்­மா­னத்­தில் கூறப்­பட்ட ஏனைய விட­யங்­க­ளில் பெய­ர­ள­வுக்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னேற்­றங்­க­ளா­கக் காண்­பிப்­ப­தும், தாம் வழங்­கிய உறு­திப்­பாட்டை நிறை­வேற்­றா­மல் காலத்தை இழுத்­த­டிப்­ப­தும் இலங்கை அர­சின் நேர்­மை­யற்ற பண்­பை­யும் கப­டத்­த­னத்­தை­யும் வெளிப்­ப­டுத்­து­கி­றது.

அத­ன­டிப்­ப­டை­யில், இலங்­கையை சர்வதேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­திற்­குப் பரிந்­து­ரைத்­தல் அல்­லது சர்வதேச குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்தை நிறு­வு­தலே பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளான தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைப்­ப­தற்­கான ஒரே­யொரு வழி­மு­றை­யா­கும் என்­றார்.