கச்சதீவு அந்தோனியாா் ஆலய பெருந்திருவிழா, பல ஆயிரக்கணக்கான மக்கள் கச்சதீவு நோக்கி பயணம்..

ஆசிரியர் - Editor
கச்சதீவு அந்தோனியாா் ஆலய பெருந்திருவிழா, பல ஆயிரக்கணக்கான மக்கள் கச்சதீவு நோக்கி பயணம்..

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தா்கள் கச்சதீவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனா். 

குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்து காலை 7.45 மணியளவில் முதலாவது படகுச் சேவை ஆரம்பமானது. ஆலய வருடாந்த திருவிழாவுக்கான பயண ஏற்பா டுகளை கடற்படையினர் மேற்கொண்டனர்.

இன்று அதிகாலை 3.30 மணிமுதல் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவானை நோக்கிப் பேருந்துகள் புறப்பட்டதுடன் அந்தச் சேவைகள் காலை 10.30 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.

நாளை காலை முதல் குறிகட்டுவானிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விசேட பேருந்துச் சேவைகள் நடாத்தப்படும்.


Radio
×