7 தமிழா்களை நாம் மன்னித்துவிட்டோம்..

ஆசிரியர் - Editor
7 தமிழா்களை நாம் மன்னித்துவிட்டோம்..

முன்னாள் இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்ப ட்டுள்ள 7 தமிழா்களையும் தாம் மன்னித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி கூறியுள்ளாா். 

சென்­னை­யில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

‘எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை என்­பது எனது தனிப்­பட்ட பிரச்­ச­னையா…? ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்ட பிரச்­சினை தொடர்­பா­னது. நீதி­மன்­றம்­தான் ராஜீவ் காந்தி கொலை­யா­ளி­களை விடு­தலை செய்­வது 

குறித்து முடி­வெ­டுக்க வேண்­டும். சிறை­யில் இருக்­கும் 7 பேர் மீது எனக்கு தனிப்­பட்ட கோபம் எது­வும் இல்லை. 7 பேர் விடு­தலை குறித்து உரிய காலத்­தில் சட்ட ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’ – என்­றார்.

Radio
×