தமிழன் அபிநந்தன் இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய விமானப்படை வீரருமான அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரை இன்று விடுவிப்பதாக அறிவித்தார்.
அதன் பின் விமானப்படை வீரர் அபிநந்தனை அழைத்துவருவதற்கான உரிய நடவடிக்கைகளை இந்திய தூதர் மேற்கொண்டார். பின்னர், பாகிஸ்தானின் ராவல் பிண்டி இராணுவ முகாமிலிருந்து லாகூருக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டார்.
பின்னர், சாலை மார்க்கமாக வாகா எல்லையை நோக்கி அவர் கொண்டு வரப்பட்டார். மாலை 4 மணியளவில் வாகா எல்லை வந்தாடைந்தார். குடியுரிமைக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்தவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உற்சாக வரவேற்பை அளிக்க துவங்கிவிட்டனர்.