SuperTopAds

அபிநந்தனை வரவேற்க காத்திருக்கும் மக்கள், நீண்ட இழுத்தடிப்புக்கு பின் இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்த்தான்..

ஆசிரியர் - Editor I
அபிநந்தனை வரவேற்க காத்திருக்கும் மக்கள், நீண்ட இழுத்தடிப்புக்கு பின் இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்த்தான்..

இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார். இந்திய பாதுகாப்புத்துறை அபிந்தனை விமானம் மூலம் அழைத்துவர முடிவு செய்தது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு சிறப்பு விமானத்தை அனுப்பி அபிநந்தனை அழைத்து வர முடிவெடுத்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ஆனால், பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானம் பறக்க அனுமதி மறுத்த பாகிஸ்தான் அரசு, இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அபிநந்தனை வாகா எல்லை வழியாக மட்டுமே அனுப்ப முடியும் 

என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து வாகா எல்லையின் வழியாக அபிநந்தன் அழைத்துவரப்பட உள்ளார். இதேவேளை ராவல் பிண்டியிலிருந்து லாகூர் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன்,

அங்கிருந்து வாகா எல்லைக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டார். பின்னர், இந்திய அதிகாரிகளிடம், அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒப்படைத்தனர். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். 

அவருக்கு, இந்திய டாக்டர்கள், குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தவுள்ளன ர். எல்லையிலிருந்து அமிர்தசரஸ் அழைத்து செல்லப்படும் அபிநந்தன், பின்னர் விமானம் மூலம் டில்லி அழைத்து செல்லப்பட உள்ளார். 

அபிநந்தனை வரவேற்க ஏராளமான பொது மக்கள் வாகா அட்டாரி எல்லையில் கூடினர். தேசிய கொடியுடன் மேளதாளம் முழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

அபிநந்தனை யார் முன்னிலையிலும் அழைத்துவரவில்லை. எனவே, அவரை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் மக்கள் உள்ளனர். ஊடகங்களின் கமராக்களிலும் அபிநந்தன் இன்னும் தென்படவில்லை.

ஆனால், அபிநந்தன் டெல்லி அழைத்துச் செல்லப்படும் முன்பாக,இந்திய பொதுமக்கள் எல்லை பகுதியில் குவிந்திருந்தனர். அவர் பொதுமக்கள் முன்னிலையில் அழைத்து வரப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.