இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் பயன்படுத்திய வழித்தடங்கள் கண்டுபிடிப்பு!
இந்திய விமானப் படையால் அழிக்கப்பட்ட பால கோட் தீவிரவாத முகாமில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவ பயன்படுத்திய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பால கோட்டில் இருந்து துத்னியால், கைந்தவாலி வனப்பகுதி, மகம் வனப்பகுதி, லோலப், கசாமா, க்ரல் போரா ஆகிய பகுதிகளின் வழியே பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட போர் பயிற்சி, மேம்படுத்தப்பட்ட ஆயுதப் பயன்பாட்டுப் பயிற்சி அங்கு தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சியில் ஏ.கே.47, மெஷின் கன், ராக்கெட் லாஞ்சர், கிரனேட் லாஞ்சர், வனத்துக்குள் தங்குதல், பதுங்கியிருந்து தாக்குதல், ஜிபிஎஸ் மேப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.