கொலை குற்றத்திற்காக தேடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு தப்பி சென்று அங்கு ஒளிந்திருந்த 2 சிங்களவா்கள் உட்பட 4 போ் கைது..
இலங்கையில் சொத்து தகராறு காரணமாக உறவினரை கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு த ப்பி சென்று ஒளிந்திருந்த 2 சிங்கள இளைஞா்கள் உட்பட 4 பேரை இந்திய மத்திய குற்றப்பிாிவுப் பொலிஸாா் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தொிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,
இலங்கை கொழும்பை சேர்ந்த சிங்க சிராந்தா என்பவர் சொத்து தகராறு காரணமாக தனது கூட்டாளியான சப்ராஸ் என்பவருடன் சேர்ந்து உறவினரை கொலை செய்து விட்டு மண்டபம் பகுதி வழியாக கள்ளத்தோணி மூலம் தமிழகம் சென்றுள்ளனா்.
பின்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் அமைந்துள்ள தங்கப்பாபுரம் VIP நகர் பகுதியில் மண்டபம் சேதுநகரை சேர்ந்த ரியாஸ் மற்றும் முகம்மது கையூம் என்பவர்களுடன் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 15 தினங்களாக தங்கியிருந்த நிலையில்,
மத்திய குற்றப் பிரிவு போலீசார் மற்றும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்துள் ளனர், கைது செய்யப்பட்ட இலங்கையர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரனை மேற்கொ ண்டு வருகின்றனர்.