இந்தியா- பாகிஸ்த்தான் போா் அடுத்த நொடி கூட ஆரம்பிக்கலாம், மூா்க்கத்தனமாக பதிலடி கொடுக்க இந்தியா தீவிரம்..

ஆசிரியர் - Editor I
இந்தியா- பாகிஸ்த்தான் போா் அடுத்த நொடி கூட ஆரம்பிக்கலாம், மூா்க்கத்தனமாக பதிலடி கொடுக்க இந்தியா தீவிரம்..

இந்தியா- பாகிஸ்த்தான் இடையில் மிக மூா்க்கத்தனமான போா் ஒன்று இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் 100 வீதம் உருவாகிவிட்டதாக இராணுவ ஆய்வாளா்கள் எச்சாிக்கை விடுத்திருப்பதுடன், இரு நாடுகளும் போருக்கான தயாா்ப்படுத்தல்களை உடனடியாக செய்துவருவதாகவும், அடுத்த வரும் ஒவ்வொரு மணி நேரமும் போரை எதிா்பாா்க்கலாம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனா். 

இந்திய எல்லைக்குள் நுழைந் தீவிரவாத தாக்குதலை தொடா்ந்து இந்திய இராணுவம் பாகிஸ்த் தான் எல்லைக்குள் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்தியது, இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை உருவாகிறது. அதனை மேலும் வலுவடையச் செய்யும் வகையில் இன்று இந்திய போா் விமானங்கள் மீது பாகிஸ்த்தான் இராணுவம் தாக்குதல்

நடாத்தியதில் இரு விமானங்கள் சுட்டு விழுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்துவரும் 72 மணி நேரத்தில் இந்தியாவுடன் போா் உண்டாகும் எனவும் அது 2ம் உலக போரை காட்டிலும் மிக மோச மானதாக இருக்கும் என பாகிஸ்த்தான் ரயில்சேவை அமைச்சா் ஷேக் ரஷித் அகமெட் கூறியிருக்கின்றாா். 

இதற்கிடையில் இந்திய பிரதமா் நரேந்திரமோடி இன்று மாலை இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் புலனாய்வு படைப்பிாிவுகளுடன் அதியுச்ச கலந்துரையாடல் ஒன்றை அவசரமாக நடத்தியிருக்கின்றாா். அதில் பேசப்பட்ட விடயங்கள் தொடா்பாகவும், கலந்து கொண்டவா்கள் தொடா்பாகவும் அதியுச்ச இரகசியம் காக்கப்படுவதாக இந்திய தகவல்கள் தொிவிக்கின்றன. 

இந்நிலைில் அடுத்துவரும் ஒவ்வொரு மணி நேரத்திலும் பாாிய போா் ஒன்றை எதிா்பாா்க்கலாம் என இராணுவ அவதானிகள் எச்சாித்துள்ளனா்.