'சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0' பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கைதான், பாகிஸ்தானுடன் போருக்கானது கிடையாது.
இந்திய விமானப்படை எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத நிலையில் நாங்கள் எடுத்துள்ளோம் என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எல்லையில் பதற்றம் காரணமான ராணுவம் உஷார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போருக்காக எடுக்கப்பட்டது கிடையாது என அரசு வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
“உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகும், போரை தூண்டுவதற்கான ராணுவ நடவடிக்கை கிடையாது. பாலாகோட்டில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது, இந்திய விமானப்படை தாக்குதலில் 300 பயங்கரவாதிகளுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர், என மத்திய அரசு வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.