துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை!
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவில் புனித நீராடி வழிபாடு செய்தார். சங்கம் படித்துறையில் மகா ஆரத்தி வழிபாடு செய்து இந்திய மக்கள் நலனுக்காக பிரதமர் மோடி வேண்டிக்கொண்டார்.
இதனையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். கும்பமேளா இடத்தை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார். அவருக்கு பலரது தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.