தமிழகம்- திருச்சியில் உள்ள ஈழ தமிழா்களால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவருக்கு உதவி..

ஆசிரியர் - Editor I
தமிழகம்- திருச்சியில் உள்ள ஈழ தமிழா்களால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவருக்கு உதவி..

போரினால் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரமந்தனாறில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு திருச்சி வாழ் ஈழத்தமிழ் உறவுகள் உள்ளிட்ட புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் உறவுகளின் நிதி உதவியில் காந்தள் கலைக்கூடத்தின் அனுசரனையுடன் மூன்றுசக்கர உந்தூருளி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

எழுந்து நடக்க முடியாத நிலையிலும் சக்கர நாற்காலி உதவியுடன் கடை ஒன்றை அமைத்து மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வரும் அவரின் முயற்சியை ஊக்குவிப்பதுடன் அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இவ்வாறு மூன்று சக்கர உந்தூருளி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான இம் மூன்றுசக்கர உந்தூருளியின் வாகன உரிமைப் பத்திரத்தை கிளி/58 கிராம சேவகர் கையளித்திருந்தார். அத்துடன் அப்பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர், காந்தள் கலைக்கூடத்தினர் ஆகியோர் முன்னிலையில் குறித்த பயனாளிக்கு மூன்றுசக்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது.

தமிழ்நாடு திருச்சி-கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களால் அங்கு வாழும் எமது மக்களிடம் சேகரித்து அனுப்பப்பட்ட தொகை மற்றும் பிரான்சு, யேர்மனி வாழ் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு