இந்திய மீனவா்களின் படகுகள், இயந்திரங்கள், வலைகள் அரசுடமையானது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
கிளிநொச்சி-பூநகாி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்ப ட்ட இந்திய மீனவா்கள் 11 போின் படகுகள், இயந்திரங்கள், வலைகள் ஆகியவற்றை அரசுடமை யாக்கி கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 11ஆம் திகதி பூநகரி – கிராஞ்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட னர் என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவா்கள் கடந்த மாதம் 13ஆம் திகதி கிளிநொச்சி நீரியல் வளத் திணைக்களத்தின் ஊடாக
மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை தை மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ம.கணேசராசா உத்தரவிட் டார். மீனவர்கள் தை மாதம் 21ஆம் திகதியன்று கடும் எச்சரிக்கையுடன்
விடுதலை செய்யப்பட்டனர். படகின் உரிமையாளரை பெப்ரவரி 21ஆம் திகதி (நேற்று) மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது. வாதங்கள், பிரதிவாதங்களைத் தொடர்ந்து மீன்பிடி யில் ஈடுபடுத்தப்பட்ட படகு, இயந்திரம் உள்ளிட்ட ஏனைய பொருள்களை
அரசுடமையாக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்றுத் தீர்ப்பிட்டார்.