'இந்தியா - சவுதி' நாடுகளுக்கு இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

ஆசிரியர் - Admin
'இந்தியா - சவுதி' நாடுகளுக்கு இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) சந்திப்பை மேற்கொண்டார். 

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியினால் வரவேற்பளிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

அத்துடன் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

இதற்கு முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சவுதி இளவரசரை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு