இது என்ன சங்கதி என்று உங்களுக்கு தெரியுமா..?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய இராணுவத்தை இலக்குவைத்து இந்தியாவின் கஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் சுமார் 44 வரையான இந்திய படையினர் கொல் லப்பட்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தமிழகத்தில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டங்களிலும், கொல்ல ப்பட்ட இந்திய படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கும், இந்தியாவில் பரவலாக அடிக்கப்பட்ட போஸ்ட்டர்கள், மற்றும் பதாகைகளில்,
தமிழீழ மாவீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு இடத்திலிருந்து வெளியான இந்த புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள், மற்றும் போஸ்ட்டர்கள் தமிழகத்தில் பல இடங்களில் பரவியிருக்கின்றது.
மேலும் இந்த விடயமே தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. அந்த படங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளுடன் இருக்கும் மாவீரர்களின் புகைப்படங்களும், கரும்புலிகளின் புகைப்படங்களும் உள்ளடங்கியிருக்கின்றது.
இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தெரியாமல் இடம்பெற்றதா? தெரிந்தே இடம்பெற்றதா? என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளது. தமிழகத்தின் கரைசி குக் கிராமங்கள் தொடக்கம் பெரிய நகரங்களில் வாழும் மக்கள் வரை தமிழீழு விடுதலை போராட்டத்திற்கும்,
தமிழீ விடுதலை புலிகளுக்கும் ஆதரவு குரல் கொடுக்கும் நிலையில் அந்த புகைப்படங்களில் இருப்பது புலிகளுடைய மாவீரர்கள் என்பது தெரியாமல் போனதா? எனவும் கேள்விகள் எழுந்து வருகின்றது.