SuperTopAds

இந்திய- இலங்கை தமிழா்களுக்கு பிரதமா் ரணில் சொன்ன செய்தி, கடல்வழி இணைப்பை உருவாக்க உறுதியளிப்பு..

ஆசிரியர் - Editor I
இந்திய- இலங்கை தமிழா்களுக்கு பிரதமா் ரணில் சொன்ன செய்தி, கடல்வழி இணைப்பை உருவாக்க உறுதியளிப்பு..

இந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும். என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூ றியிருக்கின்றாா். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் அமைச்சர் றிசாட் பதியுதின் தலைமையில் நே ற்று மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரி விக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நான் இந்த ஆட்சியை கைப்பற்றிய பின் முதன் முதலாக இப்பகுதிக்கு வருகை தந்துள்ளேன். வியாழக்கிழமை நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று அதன்பின்னர் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளேன்.

நான் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயமாக கலந்தாலோசிக்க வந்துள்ளளேன். இந்த மக்கள் எனக்கு தந்த ஆதரவை நான் ஒருபோதும் மறக்க முடியாது.

ஆகவே நான் இந்த நாட்டின் வட பகுதிக்கான அபிவிருத்திக்காக ஈடுபடுத்துவதோடு எம் மத்தியில் ஒற்றுமையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறி கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே நாம் அனைவரும் இந்த நாட்டிலே ஒற்றுமையுடன் ஒரே எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றோம். இதற்காக அமைச்சர் றிசாத் பாரிய உதவியை புரிந்தமைக்கு நான் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து அவரை நான் போற்றுகின்றேன்.

இப்பொழுது நமக்கு இருக்கின்ற பிரச்சினை இந்த நாட்டை அபிவிருத்தியில் முன்னால் கொண்டு செல்ல வேண்டியுள்ளதே. ஆகவேதான் இந்த நாட்டிலுள்ள வடக்கையும் எப்படி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம் இந்த நாட்டிலே ஒரு முக்கியமான பிரதேசம். யுத்தத்துக்கு பிற்பாடு வடக்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.

தெற்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்வதற்காக கப்பல் துறையை அபிவிருத்தி செய்கின்றோம். இத் துறையையும் தொழில் துறையையும் நாங்கள் அபிவிருத்தி செய்வதற்கு பல அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றோம்.

இதற்காக நாங்கள் அதிகமான பணத்தை செலவிட்டு வருகின்றோம். இதற்காக பெற்றக்கடனை சீர் செய்வதற்கு நாங்கள் நேர்மையான முறையில் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

நாங்கள் எப்படி தென்பகுதியை அபிவிருத்தி செய்கின்றோமோ அவ்வாறு யாழ்ப்பாணத்தையும், மன்னாரையும் இந்த வட மாகாண முழுவதையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

பலாலி விமான நிலையத்தை நாங்கள் பாரிய விமான நிலையமாக மாற்றி இந்த நாட்டின் ஒரு முக்கிய விமான நிலையமாக மாற்றுவதற்கு இருக்கின்றோம்.

இவ்வாறு காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து றிசாட் பதியுதீனின் அமைச்சின் தொழில் நிறுவனமான சீமெந்து தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய திட்டங்கள் தீட்டி வருகின்றோம். 

ஆகவே நாங்கள் அவ்விடத்தை ஒரு தொழில் அமைக்கும் கிராமமாகவும், சுற்றுல்லா பயணிகளுக்கான ஒரு இடமாகவும் அமைக்க இருக்கின்றோம்.

நாங்கள் தலைமன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும், காங்கேசன் துறையிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவைகளையும் நடத்த இருக்கின்றோம் என்ற நற்செய்தியை உங்களுக்கு இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றோம்.

தலைமன்னார் துறைமுகத்தை நாங்கள் மக்கள் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல் அதை ஒரு சிறந்த கைத்தொழில் மையமாக அமைப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.