இந்திய துணை துாதரகத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.மாவட்டத்தில் சிறு தொழில் முனைவோருக்கான வழிகாட்டல் கண்காட்சி..

ஆசிரியர் - Editor I
இந்திய துணை துாதரகத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.மாவட்டத்தில் சிறு தொழில் முனைவோருக்கான வழிகாட்டல் கண்காட்சி..

யாழ்.இந்தியத் துணைத் தூதரகமானது வட மாகாண கைத்தொழில் திணைக்களத்துடனும் யாழ் ப்பாணம் ரோட்டரிக் கழகத்துடனும் இணைந்து வட மாகாணத்தில் சிறு கைத்தொழில் முனை வோர்களை ஊக்குவிக்கும் முகமாக 

சிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும் என்ற நிகழ்வினை இன்றும்(16.02.2019) நாளையும் (17.02.2019) வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணிவரை ஏற்பாடு செய்துள்ளது.

இந் நிகழ்வின் தொடக்க நாள் நிகழ்வுகள் இன்று (16.02.2019) காலை 1000 மணி முதல் 1130மணி வரை சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் வட மகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம்

யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆளுநரின்செயலாளர் இளங்கோவன்  பிரதி பிரதம செயலாளர் திருமதி மேகநாதன் மற்றும் றோட்டாி கழக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனா். 

நிகழ்ச்சியினை நாடா வெட்டி தொடக்கி வைத்த சீ.வீ.கே. சிவஞானம் மற்றும் ஆர்னோல்ட்  தமது சிறப்புரையில் யாழ்.இந்தியத் துணைத் தூதரகமானது வடக்கு மாகாண கல்வி மற்றும் பொருளா தார அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக காத்திரமான பங்களிப்பினை வழங்கி 

வருகின்றமைக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் இக் கண்காட்சி மிகவும் பயனுடைய து என்பதால்பயனாளிகள் இதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு