SuperTopAds

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்- மோடி தலைமையில் அவசர ஆலோசனை.

ஆசிரியர் - Admin
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்- மோடி தலைமையில் அவசர ஆலோசனை.

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். 

அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்தும் அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் தற்கொலை தாக்குதலுக்கு எப்படிப்பட்ட பதிலடி கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 

காஷ்மீர் தாக்குதலையடுத்து பா.ஜனதா தலைவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டன.