"ரஃபேல் விவகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் அரசியல் இலாபம் தேடுகிறது": தமிழிசை.

ஆசிரியர் - Admin

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபம் தேடி வருவதாக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தமிழிசை சவுந்தரராஜன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “மோடியின் ஆட்சியில் சிறந்த பயனுள்ள திட்டங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவைகளில் யாருக்கும் குறை கூறமுடியாது. இவ்வாறு ஊழல் இல்லாத நிர்வாகத்தை தற்போது அவர் உருவாக்கியுள்ளார். 

அந்தவகையில் இவை எவற்றையும் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்ததொரு காரணங்களும் இல்லாதமையினாலேயே, பொய்யாக ரஃபேல் விவகாரத்தை காரணம் காட்டி காங்கிரஸ் அரசியல் செய்கின்றது.

இதேவேளை காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ரஃபேல் விவகாரம் தொடர்பில் பல்வேறு விளக்கங்கள் கொடுத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இதற்கு காரணம் அவர்கள் அரசியலில் இலாபம் ஈட்டுவதற்கேயாகும்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Radio
×