ரபேல் போர் விமானம் தொடர்பான 'சி.ஏ.ஜி.' அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய கணக்கு தணிக்கைத்துறையின் அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பில் காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் மத்திய கணக்கு தணிக்கைத்துறையின் கணக்காய்வு குழுவினர் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த அறிக்கையின் பிரதி ஜனாதிபதிக்கும் நிதியமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதன் பின்னர் குறித்த அறிக்கை பொது கணக்கு குழுவிற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக தவறான செய்திகளை காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் கூறிவருவதாக உட்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.