தமிழீழ விடுதலை புலிகள் தம்மை பாதுகாத்த இந்திய பிரதமரையும், அந்த நாட்டின் இராணுவத்தையும் கொன்றனா், மஹிந்தவின் புதிய கண்டுபிடிப்பு..

ஆசிரியர் - Editor
தமிழீழ விடுதலை புலிகள் தம்மை பாதுகாத்த இந்திய பிரதமரையும், அந்த நாட்டின் இராணுவத்தையும் கொன்றனா், மஹிந்தவின் புதிய கண்டுபிடிப்பு..

தமிழீழ விடுதலை புலிகளை இந்தியா பாதுகாத்தது. அவா்களே இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி மற் றும் இந்திய இராணுவத்தின் 1500 வீரா்களை கொலை செய்தாா்கள். என இலங்கையின் எதிா்க்கட் சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ இந்திய ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளாா். 

இந்தியா- பெங்களுாில் இருந்து வெளியாகும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு மஹிந்த ராஜபக்ஸ வழ ங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். அந்த செவ்வியில் மேலு ம் அவா் கூறியிருப்பதாவது, 

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா வழங்கிய புரிந்துணர்வு முக்கியமானது. ஆனாலு ம் இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையி ல் நல்லுறவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சுய நலன்களுக்காக செயற்பட்ட சிலரினால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங் கரவாதத்தையும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, 1980களிலும் 2014இலும் இ ந்தியா இலங்கை உறவு முறிவடைந்ததாகவும் கூறியுள்ளார்.

ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்புடன் போரிட்டபோது இந்தியாவின் சினேகபூர்வ ஆதரவு காணப்பட்டதாகவும், தற்போது ஆட்சி மாற்றங்கள் மற்றும் அரசாங்க மாற்றங்களினால் உறவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Radio
×