காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு தூண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!

ஆசிரியர் - Admin
காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு தூண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி கொண்டுச்செல்வதற்கு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர், உதாம்பூரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட இராணுவத்தின் மூத்த அதிகாரி லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே பாகிஸ்தான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

மேலும், காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான், சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது. ஆகையால் அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில், பாகிஸ்தானின் பயங்கரவாதம் ஒட்டு மொத்த உலகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 

ஆனாலும், இந்திய இராணுவத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை சிறந்த முறையில் காணப்படுகின்றமையால், எதிர்வரும் ஆண்டுகளில் காஷ்மீரில் அமைதி மற்றும் செழுமையை எம்மால் காணமுடியும்” என லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Radio
×