இந்திய – ரஷ்ய போதைப் பொருட் கட்டுப்பாட்டு பிரிவினர் அவசர சந்திப்பு!

ஆசிரியர் - Admin
இந்திய – ரஷ்ய போதைப் பொருட் கட்டுப்பாட்டு பிரிவினர் அவசர சந்திப்பு!

இந்திய மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் (NCB) தமது முதலாவது இருதரப்பு அவசர சந்திப்பொன்றை புதுடில்லியில் மேற்கொண்டுள்ளனர். 

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகம் அபே மற்றும் ரஷ்ய பணிப்பாளர் தரத்திலான மேஜர் ஜெனரல் ஸ்முரோவ் கிரில் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன்போது முக்கியமாக போதை பொருட்களைத் தடுக்கவும், போதை மருந்துகள் மற்றும் பிற மனோவியல் பொருட்களைக் கடத்துவதற்கான முக்கிய வழிகளை அடைக்கவும் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இந்த சந்திப்பு, நாடுகளுக்குள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள போதை பொருள் பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிகாரி தெரிவித்தார். 

அதேவேளை, இரண்டு நாடுகளில் அதிகாரிகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு, தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்கும், கடத்தல்களை தடுப்பதற்கும் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.