இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 196 கிலோ கஞ்சா மீட்பு, கடத்தல்காரா்கள் தப்பி ஓட்டம், இலங்கை அகதி தொடா்பிலும் விசாரணை..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 196 கிலோ கஞ்சா மீட்பு, கடத்தல்காரா்கள் தப்பி ஓட்டம், இலங்கை அகதி தொடா்பிலும் விசாரணை..

உச்சிபுளி அருகே அரியமான் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்ப தாக இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுக்கு கிடைத்த இரகசிய த கவலையடுத்து உச்சிப்புளி தனி பிரிவு போலிஸார் உதவியுடன் 

இலங்கைக்கு கடத்த அரியமான் கடற்கரை தோப்பில் மறைத்து வைத்துருந்த இந்திய  ரூபா 20லட்சம் மதிப்பிலான 196கிலோ கேரளா கஞ்சா வை பொலிஸார் பறிமுதல் செய்தனர் தப்பி யோடிய கடத்தல்கார்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

நேற்று இரவு உச்சிபுளி பேருந்து நிலையத்தில் பத்து கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இலங்கை அகதி கார்த்திக்குடன் இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோனத்தில் உளவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு கட்டமாக 206 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.