SuperTopAds

"இலஞ்சம் பெறமாட்டேனென தாயிடம் சத்தியம் செய்துள்ளேன்": மோடி

ஆசிரியர் - Admin

எந்த தொழில் செய்தாலும் யாரிடமும் இலஞ்சம் பெறக்கூடாதென எனது தாய் சத்தியம் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடியின் வாழ்க்கை வரலாறு கூறும் ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதி ஒவ்வொரு வாரமும் வெளியிடப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தனது தாய் குறித்து மோடி தெரிவித்துள்ள கருத்து ஐந்தாவது வார தொடராக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ளது. 

அதிலேயே மேற்கண்டவாறு மோடி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் இந்தியாவின் பிரதமராக அறிவிக்கப்பட்டபோது மக்கள், நண்பர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் எனது தாய், குஜராத்துக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டபோதே பெரும் மகிழ்ச்சி அடைந்தார். நாட்டின் பிரதமரான போது பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அந்தவகையில் முதலமைச்சராக நாட்டுக்கு சேவையாற்றும்போது அவர் என்னிடம் தெரிவித்ததாவது, “நீ என்ன வேலை செய்கிறாய் என எனக்குத் தெரியாது. ஆனால், லஞ்சம் மட்டும் வாங்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு” எனக் கூறினார்.

அவரின் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையின் பெரும் செல்வாக்கை இன்னும் செலுத்தி வருகின்றது. எனது தாயை பொறுத்தவரை தனது மகன், சிறந்த மனிதராக நேர்மையானவராக இருந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே ஆகும்” என மோடி குறிப்பிட்டுள்ளார்.