SuperTopAds

"சொந்த தொகுதியை பாதுகாப்பது குறித்து மோடி சிந்திக்க வேண்டும்" - மம்தா பானர்ஜி!

ஆசிரியர் - Admin

மேற்கு வங்காளம் பற்றி கனவு காண்பதற்கு முன்னர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிந்திக்க வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்காளம் மீது பா.ஜ.க அதிக கவனம் செலுத்துமென மோடி அண்மையில் நடைபெற்ற இரு கூட்டங்களில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மோடியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மம்தா பானர்ஜி நேற்று (சனிக்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பா.ஜ.க உறுப்பினர்களுக்கு மேற்கு வங்காளத்தில் தலைவர்கள் இல்லை.

மேலும் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் அரசியல்வாதிகளுக்கு இம்மாநிலத்தின் கலை, கலாசாரம், மரபு மற்றும் மக்களின் பிரச்சினைகள் ஏதும் தெரியாது. அவர்கள் தேர்தலுக்காக மக்களை சந்திப்பார்கள். பின்னர் அப்படியே காணாமல் போய் விடுவார்கள். ஆகையால் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எமது மாநிலத்துக்கு தேவையில்லை.

இதேவேளை மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வருவதற்கு முனையும் மோடியால், வாரணாசி தொகுதியில் வெற்றிபெற முடியுமா? ஆகையால் சொந்த தொகுதி பற்றி மோடி முதலில் சிந்திக்க வேண்டும்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.