SuperTopAds

'பிரியங்காவுக்கு எதிராக அவதூறு தெரிவித்தால் வழக்கு' - காங்கிரஸ் முடிவு!

ஆசிரியர் - Admin
'பிரியங்காவுக்கு எதிராக அவதூறு தெரிவித்தால் வழக்கு' - காங்கிரஸ் முடிவு!

பிரியங்காவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தேசிய மகளிர் அணி தலைவர் சுஷ்மிதா தேவ் கூறியதாவது:- 

உத்தரபிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் குறித்து அவதூறான கருத்துக்களை சில பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

இது தொடர்பாக டெல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன். மாநிலங்களின் தலைநகரில் உள்ள காவல் நிலையத்திலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு அனைத்து மாநில மகளிர் அணி தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரியங்காவின் உடல் தோற்றம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் அணியினர் நாளை அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வழக்கு தொடர இருப்பதாக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.