"பெற்றோர்களின் இலட்சியங்களை பிள்ளைகளுக்கு திணிக்க கூடாது" - பிரதமர் மோடி
பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத இலட்சியங்களை பிள்ளைகளின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள நினைக்ககூடாதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி, தல்கோடரா உள்ளக அரங்கில் மாணவர்களுடன் பிரதமர் மோடி, நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு பிள்ளைகளிடமும் தனித்திறமை உள்ளது. ஆகையால் அதனை அறிந்து அவர்களை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் பிள்ளைகளின் மதிப்பெண் அட்டையை பெற்றோர் தங்களது பெருமையைப் பறைசாற்றும் ஒன்றாக கருதகூடாது. மாறாக அவ்வாறு கருதினால் அது அவர்களின் நலனை பாதிக்கும். ஆகையால் சிறந்த முறையில் அவர்கள் செயலாற்றுவதற்கான சூழலை பெற்றோர்கள் உருவாக்கி கொடுத்து வெற்றி பாதையை நோக்கி கூட்டிச் செல்லுங்கள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.