SuperTopAds

பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியாவில் தொடரும்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியாவில் தொடரும்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடு தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டான் கோட்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறுகிய எண்ணத்துடன் மேற்கொள்ளப்படுகின்றமையாலேயே அதனை முறியடிக்க முடியாமல் இருக்கின்றது.

மேலும் பயங்கரவாத அமைப்புக்கள் தன்னுடைய கொள்கை முடிவுகளை ஆயுதங்களின் ஊடாக பயன்படுத்துவதுடன் நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கின்றது. இவ்வாறு பாகிஸ்தானின் செயற்பாடு பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதேவேளை இந்த பயங்கரவாத இயக்கங்கள், இந்தியா மற்றும் ஆப்கானிஸுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நடத்திகொண்டே இருக்கும். சிலவேளை அமெரிக்காவுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.