SuperTopAds

தமிழக மாணவன் உருவாக்கிய உலகின் சிறிய (64 கிராம்) செயற்கைகோளை நாசா ஏவியது.!

ஆசிரியர் - Admin
தமிழக மாணவன் உருவாக்கிய உலகின் சிறிய (64 கிராம்) செயற்கைகோளை நாசா ஏவியது.!

தமிழக மாணவன் உருவாக்கிய உலகின் மிகச் சிறிய செயற்கைகோளை நாசா விண்வெளி மையம் விண்ணிற்கு செலுத்தியது. மேலும், வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியது. 18 வயது தமிழக மாணவன் ரிபாத் ஷரூக்கும் அவரது குழுவினரும் வடிவமைத்த உலனின் மிகச்சிறிய செயற்கைகோள் இதுவாகும். செயற்கைகோள் பெயர் கலாம் சாட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் எடை 64 கிராம். இதன் பிறகு இந்திய விண்வெளி மையம் இஸ்ரோ பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்யும் நேற்று இரவு வெற்றிகரமாக வானில் நிறுத்தப்பட்டது.

18 வயது மாணவன்:

தமிழகத்தை சேர்ந்த 18 வயது மாணவன் ரிபாத் ஷாரூக். உலகின் மிகச்சிறிய செயற்கைகோளை வடிவமைத்துள்ளான். மேலும் இவருக்கு இவரது குழுவினர் உறுதுணையாகவும் இருந்துள்ளனர். எடை 64 கிராமாகும்.

உலக சாதனை:

இந்த செயற்கைகோள் உலகளாவிய சாதனை படைத்துள்ளது. 3டி பிரிண்டிங் செயற்கைகோளாகும். விண்வெளியில் 3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் முதல்முறையாக பயன்படுத்தப்படுகின்றது.

நாசா அனுப்பியது:

செவ்வாய் கிரகத்திற்கு 2030ம் ஆண்டில் மனிதர்களை அனுப்புவதற்காக நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக சவுண்டு ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. இது விண்வெளி குறித்து பல்வேறு ஆய்வுகளையும் செய்ய இருக்கின்றது.

பிஎஸ்எல்சி சி-44 ராக்கெட் வெற்றி:

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் ஆனது, ‘மைக்ரோசாட்-ஆர்', 'கலாம் சாட்' ஆகிய செயற்கைக்கோள்களுடன் இரவு 11.37 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

இரண்டு செயற்கைகோள் நிலைநிறுத்தம்:

புவியில் இருந்து 274.12 கி.மீ தொலைவில் உள்ள வட்டப் பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்' செயற்கைக்கோளும், 450 கி.மீ தூரத்தில் ‘கலாம் சாட்' செயற்கைக்கோளும் நிலைநிறுத்தப்படுகிறது.

இஸ்ரோ சாதனை:

‘மைக்ரோசாட்-ஆர்' செயற்கைக்கோள் புவியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்' செயற்கைக்கோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் 53 இந்திய செயற்கைக்கோள்களையும், 269 வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் ஏவி உள்ளன.

பிஎஸ்எல்வியின் 46 வது ராக்கெட்:

சற்றுமுன் அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் ஆனது, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ரகத்தின் 46வது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டில் செயற்கைக்கோள்களின் சுற்று வட்டப் பாதையை அதிகரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலாம் ராக்கெட்:

இதுவரை ராக்கெட்களின் 4வது நிலையில் செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டின் 4வது நிலையில் ‘கலாம் சாட்' செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.