பிரந்திய விமான நிலையமாக மாறுகிறது பலாலி விமான நிலையம், 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கியது அரசு..

ஆசிரியர் - Editor I
பிரந்திய விமான நிலையமாக மாறுகிறது பலாலி விமான நிலையம், 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கியது அரசு..

யாழ்.பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இந்தி யாவிலிருந்து விமானசேவையும் நடைபெறவுள்ளதுடன், 2 பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்திருக்கி ன்றது. 

இதுவரையில் பலாலி விமானத்தளம் இலங்கைப்படையினரின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஏற்கனவே பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் யோசனை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பலாலி விமான நிலையத்தள வட பிராந்திய விமான போக்குவரத்து சேவைகளை நடத்தும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மாற்றி அபிவிருத்தி செய்ய இந்தியாவில் உதவியை பெற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் பலாலியில் இருந்து இந்தியாவின் சில நகரங்களுக்கு விமான சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு