கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 23ம் திகதி வரை விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 23ம் திகதி வரை விளக்கமறியல்..

கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு விபத்துக்குள்ளாகி ஒரு மீனவர் பலியானதுடன் எட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதவான் நிதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடு த்து இன்று இந்த வழக்கு ஊர்காவற்துறை 

நிதவான் நீதிமன்ற நிதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை விசாரித்த நீதவான் மீனவர்கள் எட்டு பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை மீட்பதற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்த மீட்புக் குழுவினரும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். 

இதன் போது கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு