SuperTopAds

இயக்குனா் இமயம் பாரதிராஜா என்னை ஏமாற்றிவிட்டாா்.. கதறும் யாழ்ப்பாண இளைஞன்.

ஆசிரியர் - Editor I

தென்னிந்திய சினிமா இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா தனது கல்லுாாியில் சினிமா துறை தொடா் பாக கல்வி கற்க சென்ற தன்னிடம் பெற்ற 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை திருப்பி தரவில் லை என யாழ்ப்பாணத்தை சோ்ந்த இராஜரட்ணம் இராசரட்ணம் வினோஐ் என்ற இளைஞன் குற்றஞ்சாட்டி யுள்ளதுடன், பணத்தை கேட்டால் உாிய பதில் கொடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளாா். 

இது குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டிரு ந்த வினோஐ் என்ற குறித்த இளைஞன் மேலும் கூறுகையில், 2017ம் ஆண்டு இயக்குனா் பாரதிராஜா உருவா க்கிய பிறிக் என்ற கல்லுாாியில் சினிமா இன் ஒட்டோகிராப்பி டிப்ளோமா கற்கை நெறிக்காக விண்ணப்ப ம் செய்திருந்தேன். இதன்போது எனக்கு இந்தியாவில் தங்கியிருப்பதற்கான வீசா பிரச்சினை 

இருந்தது. அப்போது அந்த விடயத்தை கூறி எனக்கு வீசா மறுக்கப்பட்டால் கல்லுாாிக்கு செலுத்திய பணத் தினை மீளபெற முடியுமா? என கேட்டிருந்தேன். அப்போது ஆம் மீள பெறலாம் என உத்தரவாதம் தரப்பட் டது. இந்நிலையில் நாம் நினைத்ததுபோல் வீசா பிரச்சினை உருவானது. இந்நிலையில் மீண்டும் இந்தியா வுக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் எனது பணத்தை திரும்பி தருமாறு கேட்டிருந்தேன். 

பல தடவைகள் கேட்டும் எனது பணம் எனக்கு கிடைக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் பணத்தை கேட்டு அழைப்பை எடுக்கும்போது ஒரு வாரம், ஒரு மாதம் என கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடா் ந்து கடந்த வருடம் எனது பணத்தை தாருங்கள் என இறுக்கமாக கேட்டேன். அதற்கு எனக்கு 3 படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த படிவத்தில் இயக்குனா் பாரதிராஜா கையொப்பமிட்டிருந்தாா். 

மேலும் அந்த படிவங்கள் பாரதிராஜா எனக்கு சேரவேண்டிய 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப் பி அனுப்பியுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் பணம் எனக்கு கிடைக்கவில்லை. இதன் பின்னா் நான் தொலைபேசி அழைப்பை எடுத்தபோது அவா்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. தொடா்ச்சியா க அமைதி காத்து வருகின்றனா். இந்நிலையில் எனக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுக் கொடுக்க

நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக் கொண்டாா்.