இந்திய மீனவர்கள் 9 பேர் ஒத்திவைக்கப்பட்ட 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறைத்தண்டணையுடன் விடுதலை..

ஆசிரியர் - Editor I
இந்திய மீனவர்கள் 9 பேர் ஒத்திவைக்கப்பட்ட 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறைத்தண்டணையுடன் விடுதலை..

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந் திய மீனவர்களுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் கடூழிய சி றைத் தண்டணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களையே விடுதலை செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஒன்பது பேருக்கும் ஜந்தாண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத் தண்டனை  விதித்துள்ளதுடன் படகிற்கான சகல ஆவணங்களையும் எதிர்வரும் மார்ச் 05ஆம் திகதி மன்றில் சமர்பிக்கவும் 

நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தவறும் பட்சத்தில் படகானது அரச உடமையீக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு