SuperTopAds

சபரிமலை விவகாரம் தொடர்பான கேரள அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசம் - பிரதமர் மோடி கடும் தாக்கு.

ஆசிரியர் - Admin
சபரிமலை விவகாரம் தொடர்பான கேரள அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசம் - பிரதமர் மோடி கடும் தாக்கு.

பிரதமர் மோடி கேரளா மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக சென்றார். கேரள மாநிலத்தில் கொல்லம் பைபாஸ் சாலை உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். 

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் 142வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். உலகிலேயே வேகமான வளர்ச்சி இதுவாகும்.

சபரிமலை விவகாரத்தில் இடதுசாரிகளின் நடவடிக்கை வரலாற்றில் மோசமான அரசு அல்லது கட்சிகளின் செயல்பாட்டை காட்டிலும் மோசமானது. அவர்கள் இந்திய கலாசாரம், பண்பாடு, ஆன்மீகத்தை மதிக்க மாட்டார்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தளவு வெறுப்பு வைத்திருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலையை கடைபிடிக்கிறது. காங்கிரஸ் பல நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. பார்லிமென்டில் ஒன்றை கூறுவார்கள். பத்தனம்திட்டாவில் வேறொன்றை கூறுவார்கள். அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. இளைஞர்களின் சக்தி, ஏழைகளை புறக்கணிப்பது, மக்களை ஏமாற்றுவதில் இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் தான் என தெரிவித்தார்.