உயிாிழந்த இந்திய மீனவாின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறுகோரவுள்ள இந்திய துணைதுாதரகம்..
உயிரிழந்த இந்திய மீனவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு இன்றைய தினம் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் நீதிமன்றில் மனுச் சமர்ப்பிக்கின்றது.
கடற்படையினரின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே கடந்த 13ம் திகதி அதிகாலையில் உயிரிழந்த இந்திய மீனவரான முன்னச்சாமி என்பவரது சடலமே
இந்தியத் தூதரகத்துனால் பொறுப்பேற்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை யாழில் உள்ள துணைத் தூதரகம் மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் கடற்படையினர் மறித்து கைது செய்யும் நோக்கில் கடற்படையினரின் படகில் ஏறுமாறு பணித்த சமயம்
கடற்படையினரின் டோறாப் படகினை மீனவர்களின் சிறிய படகின் அருகே அணைப்பதற்கு முயற்சித்த சமயம் கடற்படையினரின் இரும்பு படகு
மீனவர்களின் மரத்தினால் தயாரிக்கப்பட்ட படகுடன் மோதியது. இதன்போது இந்திய மீனவர் ஒருவர். உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த 3 இந்திய மீனவர்களும் உயிரிழந்த மீனவரின் சடலத்தை அடையாளம் காட்டிய நிலையில் தற்போது
முன்னச்சாமியின் உடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் நிறைவுற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் உயிரிழந்த இந்திய மீனவரின் உறவினரின் மகள் என அடையாளம் கானப்பட்டவர் தனது தந்தையின் உடலைப் பெற்றுத்தருமாறு
கோரிக்கை விடுத்துள்ளதனால் இந்தியாவிற்கு உடலை அனுப்பி வைக்கும் நோக்கில் மல்லாகம் நீதிமன்றிடம் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.