SuperTopAds

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்வோம்.. கடற்படை எச்சாிக்கை.

ஆசிரியர் - Editor I
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்வோம்.. கடற்படை எச்சாிக்கை.

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவா்கள் எவராக இருந்தாலும் அவா்கள் கைது செய்யப்படுவாா்கள் எ ன கூறியிருக்கும் இலங்கை கடற்படை பேச்சாளா் லெப்டினன் கொமாண்டா் இசுறு சூாிய பண்டார,

இந்திய மீனவா்களின் அத்துமீறல்களினால் வடபகுதி மீனவா்கள் பொிதும் பாதிக்கப்படும் நிலையில் இந்திய மீனவா்க ளை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் கூறியுள்ளாா். 

இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது.  இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளின்  காரணமாக  

வடபகுதி மீனவர்களின் வலைகளுக்கு பாரிய சேதம்  ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது.  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  பிரவேசிப்பவர்களை 

கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். கடந்த 12 ஆம் 13  ஆம் திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள்   500 இற்கும்  அதிகமான  இந்திய படகுகள்  

அத்துமீறி நுழைந்தமை இலங்கை கடற்படையினரால்  அவதானிக்கப்பட்டுள்ளது.  இதன்போது இரண்டு படகுகளில்  இருந்த   9 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு  

எதிர்வரும்  17  ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  தமிழகத்தின் புதுக்கோட்டை  பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.