முன்னுக்கு பின் முரண்பாடான கதைகளை கூறும் இந்திய மீனவா்கள்.. கடற்படை தாக்கவில்லை என இப்போது கூறுகின்றனா்.

ஆசிரியர் - Editor I
முன்னுக்கு பின் முரண்பாடான கதைகளை கூறும் இந்திய மீனவா்கள்.. கடற்படை தாக்கவில்லை என இப்போது கூறுகின்றனா்.

இலங்கை கடற்படையினரின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே எமது சக மீனவரான முன்னச்சாமி உயிரிழந்தார் . என அவருடன் கூடப் பயணித்த இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் எம்மை இலங்கை கடற்படையினர் மறித்து கைது செய்யும் நோக்கில் கடற்படையினரின் படகில் ஏறுமாறு பணித்தனர். 

இதன்போது கடற்படையினரின் பாரிய படகினை எமது சிறிய படகின் அருகே அணைப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. அந்த நேரம் கடற்படையினரின் இரும்பு படகு எமது மரத்தினால் தயாரிக்கப்பட்ட படகுடன் மோதியது. 

இதன்போது எமது படகில் இருந்து உயிரிழந்த மீனவரே எமது படகின் ஓட்டியவர். அவர் இயந்திர அறையில் இருந்தார் அத் திசையிலேயே படகு உடைந்து இயந்திரப் பகுதியினை மூடியது. 

இதனால் அதற்குள் அகப்பட்ட எமது ஓட்டி வெளியே வர முடியவில்லை. அல்லது கடலில் குதிப்பதற்கும் அவருக்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை. 

இருப்பினும் அவரை கடற்படையினர் மீட்பர் என்றே நம்பினோம். இதன்போது நாம் மூவரும் கடலில் குதித்துவிட்டோம். எம்மை கடற்படையினர் தமது படகில் ஏற்றினர். 

அப்போதுதான் அவதானித்தோம் எமது ஓட்டி வரவில்லை என்பதனை. இதற்குள் நாம் பயணித்த படகு முழுமையாகவே கடலில் மூழ்கிவிட்டது. இதன்போது எமது ஓட்டியை கடற்படையினர் கண்டதாக தெரியவில்லை.

விபரத்தையும் நாம் தெரிவிக்க முற்பட்டோம். அங்கே தமிழ் தெரிந்த கடற்படையினர் இருப்பதாகவும் தெரியவில்லை. அதனைவிட நாம் பேசுவதும் புரியவே இல்லை. 

இதனால் திரும்பிய பின்பே அப்படகில் இருந்த ஒருவர் தொடர்பில் கடற்படையினரிடம் வினாவினோம். தாம் தேடியதாகவும் கானவில்லை என்றனர்.

 இதன் பிரகாரம் எமது படகு ஓட்டி படகிலேயே இறந்திருக்க வேண்டும். இதேநேரம் அப் படகில் வந்த ஏனைய மூவருக்கும் எந்த சேதமும் இல்லை. கடற்படையினர் எம்மைத் தாக்கவில்லை. எனத் தெரிவித்தனர்.

இதேநேரம் இரண்டாவது படகில் பயணித்த ஐவரில் இருவர் மாணவர்கள் வறுமையின் காரணமாக கடற்றொழிலுக்கும் பயணிக்கும் நிலையில் அவர்களின் படகும் கடற்படையினரின் படகுடன் மோதியே 

சேதமடைந்த்தாக கூறும் இந்திய மீனவர்கள் தம்மை கடற்படையினர் தாக்காதபோதும் படகினை மோதித்தள்ளியவேளையில் படகு உடைத்த மரங்கள் குற்றியதில் இருவர் படுகாயமடைந்தோம் எனத் தெரிவித்தனர். 

அத்தோடு அவ்வாறு தாக்கிய அடையாளமும் இரு மீனவர்களின் உடல்களில் தென்படுகின்றதோடு ஒருவரின் காயத்திற்கு காங்கேசன்துறையில் உள்ள கடற்படையினரின் வைத்தியசாலையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்று முன்தினம் இவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறியதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மீனவருடன் 

பயணித்த 3 இந்திய மீனவர்களும் கை விலங்கு இடப்பட்ட நிலையில் உயிரிழந்த மீனவரின் சடலத்தை அடையாளம் கான்பிப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் 8 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்பட்டவேளையில் எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேநேரம் உயிரிழந்த மீனவரின் பிரேத பரிசோதனை அறிக்கை மல்லாகம் நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் உத்தரவின் பெயரில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு