SuperTopAds

பல லட்சம் ரூபாய் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
பல லட்சம் ரூபாய் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு..

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான கடலட்டைகள் மன்னாா் கடற்பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மன்னார் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, சட்ட விரோதமாக பிடித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டன.

சுமார் 12 பொதிகளைக் கொண்ட கடலட்டைகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கடலட்டைகள் 302 கிலோ கிராம் எடை கொண்டது எனவும்,பல இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். கடல் அட்டைகளுடன் டிங்கி படகு , மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஒன்று கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள கடல் அட்டைகள், மற்றும் டிங்கி படகு மற்றும் வெழி இணைப்பு இயந்திரம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.