முல்லைத்தீவில் இரு பாடசாலைகளுக்கு நிழற்பிரதி இயந்திரங்களை வழங்கிய ரவிகரன்..
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் இருபாடசாலைகளுக்கு நிழற் பிரதி இயந்திரங்க ளை கையளித்துள்ளார்.
பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டிலிருந்து உரூபாய் 200,000.00(இரண்டு இலட்சம்) பெறுமதியில் ரவிகரன் அவர்களால் பாடசாலைகளுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை, மற்றும் ஐயன்கன்குளம் அ.த.க பாடசாலை
ஆகிய பாடசாலைகளுக்கே இவ்வாறு நிழற்பிரதி இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கடந்தவாரம் ரவிகரன் குறித்த நிழற்பிரதி இயந்திரங்கள் பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.