27வயதான இளம் யாழ்ப்பாண விவசாயி இந்தியா செல்கிறார்..

ஆசிரியர் - Editor
27வயதான இளம் யாழ்ப்பாண விவசாயி இந்தியா செல்கிறார்..

யாழ்.அளவெட்டியை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள புலமை பரிசில் இந்தியாவுக்கு செல்கின்றார் என யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

அளவெட்டியை சேர்ந்த மனோகரன் கோகுலன் (வயது 27) எனும் இளம் விவசாயி மத்திய அரசின் புலமைபரிசினை பெற்று விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற இந்தியா செல்கின்றார். 

வர்த்தக ரீதியில்  மரக்கறி பயிர்செய்கை , பழ பயிர்செய்கை என்பவற்றை மேற்கொண்டு வடமாகாணத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டவர்.   இவர் இந்தியா சென்று விவசாய உற்பத்திகளின் நவீன உத்திகளை கற்றுகொள்ள உள்ளார். 

இளைஞர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு முன்னேறலாம் என்பதற்கு கோகுலன் முன்னுதாரணமாக உள்ளார் என தெரிவித்தார்.