இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 4 இந்திய மீனவா்கள் கைது..

ஆசிரியர் - Editor
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 4 இந்திய மீனவா்கள் கைது..

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்று (08)அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றும் (07) அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Radio
×