SuperTopAds

போர்க்களமாகிய சபரிமலை: ஆர்வலர் பலி

ஆசிரியர் - Admin
போர்க்களமாகிய சபரிமலை: ஆர்வலர் பலி

பிந்து அம்மிணி மற்றும் கனக துர்கா ஆகிய இருபெண்களும் நேற்று அதிகாலை போலீஸார் உதவியுடன் சபரிமலைக்குள் நுழைந்து ஐப்பனை தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு சங் பரிவார், பாஜ., ஆர்எஸ்எஸ் அமைப்பினர், போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதில் 55 வயதான சமூக ஆர்வலர் ஒருவர் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கல்லடிபட்டு காலமானார். செய்தி சேகரிக்க வந்த சில பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். தற்போது கேரளாவில் கடையடைப்பு, அரசு பேருந்து நிறுத்தம் தொடர்கிறது. பல கல்லூரிகளில் தேர்வுகள் ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கேரளா, கன்னூர், மஹாத்மா காந்தி, கேலிகட் பல்கலை.இகள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் உண்மையான ஐயப்ப பக்தர்கள் பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை ஏற்றுக்கொள்கின்றனர். பாஜ.இவின் தூண்டுதல் பேரில் செயல்படும் அமைப்புகள்தான் போடாட்டம் நடத்தி வருகின்றன. பாஜ.இ இதில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. வேண்டுமேன்றே உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசியல் செய்கிறது என்றார்.

38 போலீஸார் உட்பட மொத்தமாக 100 பேர் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்துள்ளனர். இன்னமும் போராட்டம் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சி அமைப்பான யூடிஎஃப், பெண்கள் உரிமை மறுக்கப்படும் இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்கிறது. 

அதே வேளையில் பாஜ.இ அமைப்புகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. கூச்சல், குழப்பம்இ தள்ளுமுள்ளுவுக்கு நடுவே நான்கு பாஜ.இ தொண்டர்கள் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். பந்தளம், கோழிக்கோடு பகுதிகளில் வீடுகளை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்மீது போலீஸாரால் கண்ணீர் புகை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.