SuperTopAds

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய இந்திய படகு.. மேல் நடவடிக்கைகள் தீவிரம்.

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய இந்திய படகு.. மேல் நடவடிக்கைகள் தீவிரம்.

முல்லைத்தீவு- வலைஞர்மடம் கடற்பகுதியில் நேற்று முன்தினம் சேதமடைந்த நிலையில் இந்திய படகு ஒன்று கரை ஒதுங்குவதை அவதானித்த மக்கள் நேற்று அதனை மீட்டுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தகவல் வழங்கப்பட்டு குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட படகு பூரணமாக சேதமடைந்துள்ளது. 

அந்த படகில் மலையாள மொழியில் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான காற்றினால் முல்லைத்தீவு கடல் தொடர்ந்தும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. 

இதனால் குறித்த படகை மீட்பதில் நேற்று பெரும் சிக்கல் உருவானபோதும் இறுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், 

இந்த படகு கடல் கொந்தளிப்பினால் சேதமடைந்து மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.  இது தொடர்பாக பொலிஸார் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.