இலங்கை கடற்படை வீரரை கடலில் தள்ளிவிட்ட இந்திய இழுவை படகு அனுமதியை இரத்து செய்த இந்திய அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடற்படை வீரரை கடலில் தள்ளிவிட்ட இந்திய இழுவை படகு அனுமதியை இரத்து செய்த இந்திய அதிகாாிகள்..

இலங்கை கடற்படபரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய மீனவர்களின் படகினை கைப்ப ற்றி கரைக்கு கொண்டுவர முனைந்த சமயம் ஓர் கடற்படைவீரரினை  நடுக்கடலில் தள்ளி வீழ்த் திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் ராமேஸ்வரம் மீனவரின் படகு அனுமதியினை இந்திய மீ ன்பிடித்துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

கடந்த 22ந்தேதி ராமேஸ்வரத்தைச்சேர்ந்த சக்தி என்பவரின்  படகு மன்னார் கடற்பரப்பில் மீன்பி டியில் ஈடுபட்டிருந்த சமயமே இவ்வாறு  இலங்கை கடற்படை வீரர்  ஒருவர் கடலில் விழுந்த்தாக கூறப்படுவதோடு கடலில் வீழ்ந்த கடற்படைச் சிப்பாய் இந்திய மீன்பிடிப் படகின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீன்பிடிப்படகான ind tn 10 mm 364 இலக்க படகில் 3 சூட்டு அடையாளமும் கானப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அதிகாரிகள் இதுதொடர்பில் விசாரணை மேற்கவண்டுவரும் நிலையில்  குறித்து பாதுகாப்பு அதிகாரிகள்  தொடர்ந்து  விசாரணை நடத்திவருகின்றனர். 

இதன் காரணமாக  விசாரணை முடியும் வரை அந்த படகிற்கு அரசு வழங்கும் மானிய  டீசல் மற்றும் மீன்பிடி அனுமதி சீட்டு உள்ளிட்டவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய  மீன்பிடித்  துறை உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் 

பல முறை  தொடர்பு கொண்டு கேட்டபோதும் இவ்வாறான சம்பவம் எவையும் இடம்பெறவில்லை. எனப் பதிலளித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு